தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!

சென்னை, ஏப்ரல் 20: டெல்லியின் முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் (2026) முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய இன்று சென்னை வந்தார்.

சென்னையில் வந்தடைந்த கெஜ்ரிவால், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியின் செயல்திறனை அவர் பாராட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக, ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

இன்று மாலை புளியந்தோப்பு முதல் சூளை வரை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரம்மாண்ட சாலைப்பேரணியில் (ரோட்ஷோ) கலந்து கொள்கிறார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியக் கூட்டணியின் தேசியத் தலைவர்களின் வருகை தேர்தல் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *