கானத்தூர் ரெட்டிக்குப்பத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் அசோக் ஆரஞ்சு விஷன் சென்டர் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 04.10.2026, ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமில் கானத்தூர் ரெட்டிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர். பொதுமக்களின் கண் நலனை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இம்முகாம், அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்த கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளி எட்டியப்பன் அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்ததுடன், நன்றியையும் தெரிவித்தனர்.

பொதுமக்களின் உடல்நலன் மற்றும் நலவாழ்வை கருத்தில் கொண்டு இதுபோன்ற இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *