இன்று தமிழக ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், இன்று (மே 6, 2026) மதியம் 3:30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்திக்கிறார்.

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க அனுமதி கோரி விஜய் ஆளுநரிடம் கடிதம் அளிக்க உள்ளார்.

ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களுக்கு 10 இடங்கள் குறைவாக இருந்தாலும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்கும் உரிமையை அவர் கோருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *