இலங்கை நாடாளுமன்றத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த எம்.பி!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி, இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. நிசாம் காரியப்பர் வாழ்த்து தெரிவித்தார்.

விஜய்க்கு தனது பாராட்டுகளை தெரிவிக்கும் போது, “அழகிய தமிழ் மகன்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே, நீ நதிபோல ஓடிக்கொண்டிரு” என்ற பாடலைப் பாடி, தனித்துவமான முறையில் தனது வாழ்த்துகளை பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் உள்ளிட்ட பல இலங்கை அரசியல் தலைவர்களும் விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *