
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்ற உறுப்பினர்களுடன் நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரி விஜய் தனது ஆதரவை ஆளுநரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் வட்டாரங்களில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.