தவெக தலைவர் விஜய் பனையூர் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் (2026) முடிவுகளின்படி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அமோக வெற்றி பெற்று, மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், த.வெ.க 108 இடங்களை கைப்பற்றி வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட விஜய், 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, சென்னை பனையூரில் அமைந்துள்ள த.வெ.க தலைமை அலுவலகம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவருக்கு மத்திய அரசின் ‘Y’ பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் அவர் ஆட்சி அமைக்க சாதகமாக உள்ள நிலையில், சென்னை மாநகர காவல்துறையும் உயர்மட்ட பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *