தவெக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினருடன் மார்னிங் டைம்ஸ் துணை ஆசிரியர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

பல்லாவரம், ஜூன் 06:

தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள ஜே.காமாட்சி ஜெயகிருஷ்ணன், எம்.எல்.ஏ. அவர்களை, மார்னிங் டைம்ஸ் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் எஸ்.முஹம்மது ரவூப் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு குரோம்பேட்டையில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பல்லாவரம் தொகுதியின் வளர்ச்சி, பொதுமக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின் போது, மார்னிங் டைம்ஸ் துணை ஆசிரியர், சட்டமன்ற உறுப்பினர் ஜே.காமாட்சி ஜெயகிருஷ்ணன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்தார். மேலும், மார்னிங் டைம்ஸ் பத்திரிக்கையின் 2026ஆம் ஆண்டுக்கான சிறப்பு மலர் மற்றும் இதழையும் வழங்கி அதன் வெளியீட்டு பணிகள் மற்றும் சமூக நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
மார்னிங் டைம்ஸ் பத்திரிக்கை சார்பில் வழங்கப்பட்ட சிறப்பு மலரை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர், பத்திரிகையின் சமூகப் பணிகள் மற்றும் செய்தி சேவைக்கு தனது பாராட்டுகளை தெரிவித்ததுடன், மக்கள் நலன் சார்ந்த தகவல்களை தொடர்ந்து வெளிக்கொணரும் ஊடகப் பணிகள் பாராட்டத்தக்கவை என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு அன்பும் மரியாதையும் நிறைந்த சந்திப்பாக அமைந்ததுடன், சமூக நலன் மற்றும் மக்கள் சேவைக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *