ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதல்வரை சந்தித்தார் மார்னிங் டைம்ஸ் உதவி ஆசிரியர்

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதல்வர் அரவிந்த் அவர்களை, மார்னிங் டைம்ஸ் உதவி ஆசிரியர் அப்துல் ரஹ்மான் மரியாதை நிமிர்த்திமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, மார்னிங் டைம்ஸ் 2026 சிறப்பு மலரை ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதல்வரிடம் வழங்கினார். மேலும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் மருத்துவ சேவைகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட செய்திகளை பாராட்டி, தனது நன்றியை முதல்வர் தெரிவித்தார்.

அத்துடன், வருங்காலங்களில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெறும் மருத்துவ முன்னேற்றங்கள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் முக்கிய சாதனைகள் குறித்து மார்னிங் டைம்ஸ் இதழில் தொடர்ந்து வெளியிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *