“என்னால மக்கள் ஏன் கஷ்டப்படணும்?” – சென்டிமென்ட் வீட்டை விடத் துணிந்த முதலமைச்சர் விஜய்! – நெகிழ்ச்சியில் சென்னை வாகன ஓட்டிகள்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து சென்னை கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்திற்குத் தினமும் சுமார் 17 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொள்வதால், நகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருவதாக அண்மையில் சில செய்தி வெளிவந்தது.

மேலும், அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகள் தினமும் முதல்வரைச் சந்திப்பதற்காக நீலாங்கரைக்கு வந்து செல்வதும் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை அதிகரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்தச் செய்திகளுக்கு உடனடியாகவும் நேர்மறையாகவும் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய், “என்னால மக்கள் ஏன் கஷ்டப்படணும்?” என்ற எண்ணத்துடன், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியுடன் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தலைமைச் செயலகத்திற்கும் அரசுத் துறைகளுக்கும் அருகில் அமைந்த இடத்திற்கே தனது புதிய இல்லத்தை மாற்றுவதற்கான தீவிர ஆலோசனைகளிலும் முன்னேற்பாடுகளிலும் முதலமைச்சர் விஜய் ஈடுபட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கை மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முதலமைச்சரை எளிதாகச் சந்திக்க முடிவதுடன், போக்குவரத்து நெரிசலும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் சிரமத்தை உணர்ந்து, தனிப்பட்ட சென்டிமென்ட்களை விட பொதுநலனுக்கு முன்னுரிமை அளித்த முதலமைச்சர் விஜயின் இந்த அணுகுமுறை, சென்னை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *