
செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி, 2025-26 கல்வியாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி மற்றும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் சிறப்பாக தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக பள்ளியின் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர்.
*மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள்:*
🔹 V. சந்திர கிஷோர் – 491/500 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
🔹 R. விக்னேஷ் – 488/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
🔹 E. அபிநயா – 470/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
மாணவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.முரளிதரன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், சாதனை படைத்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும், உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.