
சென்னை, ஜூன் 20:
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
*அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:*
“இந்திய நாட்டின் முதன்மைக் குடிமகனும், குடியரசுத் தலைவருமான திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியத் திருநாட்டிற்கு தாங்கள் ஆற்றி வரும் அர்ப்பணிப்பான மற்றும் உன்னதமான சேவை தொடர்ந்து தொய்வின்றித் தொடர வாழ்த்துகிறேன்.
தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீடித்த ஆயுளுடனும் இருந்து, நாட்டுக்கான தங்களின் மேலான சேவைகள் மேலும் சிறக்க மனதார வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.