தவெக அமைச்சருடன் மார்னிங் டைம்ஸ் சென்னை மாவட்ட செய்தியாளர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில் 29/05/2026 வெள்ளிக்கிழமை, கடலூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான ப.ராஜ்குமார் அவர்களை மார்னிங் டைம்ஸ் சென்னை மாவட்ட செய்தியாளர் ரியாஸ் அலி மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, அமைச்சருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி கவுரவிக்கப்பட்டது.

அப்போது தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவது குறித்து விரிவாக கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒன்றாக இருந்ததுடன், நிகழ்வின் நிறைவாக மார்னிங் டைம்ஸ் பத்திரிகை மற்றும் சிறப்பு மலர் அமைச்சரிடம் வழங்கப்பட்டது. அதனை அமைச்சர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, மார்னிங் டைம்ஸ் பத்திரிகையில் தவெக செய்திகள் இடம்பெற்றிருந்ததை பார்வையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், பத்திரிகையின் சேவையை பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *