
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர்.
அப்போது, முதலமைச்சருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்த ஆற்காடு இளவரசர் குடும்பத்தினர், புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.