குழந்தையை மீட்ட காவல் குழுவினருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை : ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் பிறந்த 9 நாட்களே ஆன பெண் குழந்தை கடந்த மே 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, உதவி காவல் ஆணையாளர் (AC) தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் தகவல்களின் உதவியுடன் அமுலுக் பவரோஸ் என்ற பெண்ணை அடையாளம் கண்டு பிடித்த போலீஸார், கடத்தப்பட்ட குழந்தையை வெறும் 5 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டனர்.

காவல்துறையினரின் இந்த துரித மற்றும் சிறப்பான நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், குழந்தையை விரைவாக மீட்ட காவல் குழுவினரின் சிறப்பான பணியை பாராட்டும் வகையில், சென்னை மாநகர காவல் ஆணையர் A.அமல்ராஜ், இ.கா.,ப., அவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *