தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

தென்காசி, மே 25: தென்காசி மாவட்டத்தின் 9-வது காவல் கண்காணிப்பாளராக (SP) எஸ்.அசோக் குமார் இ.கா.ப., (25.05.2026) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொறுப்பேற்பு நிகழ்விற்கு முன்னதாக, புதிய காவல் கண்காணிப்பாளருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை எஸ்.அசோக் குமார் இ.கா.ப. மரியாதையுடன் ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு புதிய காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *