மார்னிங் டைம்ஸ் துணை ஆசிரியர் மற்றும் சென்னை மாவட்ட செய்தியாளர் தவெக அமைச்சர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சென்னை: தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மக்கள் நலன் மிக்க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு துறைகளில் மக்கள் சேவையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வு நடைபெற்றது. மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு அரசின் உணவுத்துறை அமைச்சருமான வெங்கட்ரமணன் மற்றும் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பால் வளம் மற்றும் பால் பொருள் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.விஜயலட்சுமி மற்றும் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V.M.S. முஸ்தபா ஆகியோரை, மார்னிங் டைம்ஸ் துணை ஆசிரியர் முஹம்மது ரவூப் மற்றும் சென்னை மாவட்ட செய்தியாளர் ரியாஸ் அலி ஆகியோர் மரியாதை நிமிர்த்திமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது, அமைச்சர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து விரிவாக கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மேலும், ஊடகங்களின் சமூகப் பொறுப்பு, உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதின் அவசியம் மற்றும் மக்கள் மத்தியில் அரசின் திட்டங்களை விழிப்புணர்வுடன் எடுத்துச் செல்லும் பணிகளில் ஊடகங்களின் பங்கு குறித்து முக்கிய ஆலோசனைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் நிறைவாக, மார்னிங் டைம்ஸ் பத்திரிகை மற்றும் சிறப்பு மலர் அமைச்சர்களிடம் வழங்கப்பட்டது. அதனை அமைச்சர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, பத்திரிகையின் சேவையை பாராட்டினர்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான ஒன்றாக இருந்ததுடன், அரசியல், மக்கள் நலன் மற்றும் ஊடகப் பணிகள் தொடர்பான பயனுள்ள கலந்துரையாடலாகவும் அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *