
ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகருக்கு 17/05/2026 அன்று அரசு முறை பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, ஸ்வீடன் நாட்டின் இளவரசி விக்டோரியா அந்நாட்டு உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார் – கமாண்டர் கிராண்ட் கிராஸ்’ (Royal Order of the Polar Star, Commander Grand Cross) விருதை வழங்கி கௌரவித்தார்.
உலக நாடுகளுடனான நட்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உலகளாவிய அமைதி, பொருளாதார வளர்ச்சி மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் அவர் வெளிப்படுத்திய தலைமைத்துவத்தையும் ஸ்வீடன் அரசு பாராட்டியுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கிய உயரிய கௌரவங்களில் இது பிரதமர் மோடி பெறும் 31-வது விருதாகும். மேலும், ஸ்வீடன் நாட்டின் இந்த உயரிய விருதைப் பெறும் முதல் ஆசியத் தலைவராகவும் பிரதமர் மோடி வரலாறு படைத்துள்ளார்.
விருதைப் பெற்றுக்கொண்ட பின்னர் பிரதமர் மோடி, “இந்த கௌரவத்தை 140 கோடி இந்திய மக்களுக்கும், இந்தியா – ஸ்வீடன் நாடுகளுக்கிடையிலான நீண்டநாள் நட்புறவுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.