
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள ஹாமீம்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர், நல்லாசிரியர் சூ.ஜோசப் மைக்கிள் M.A., B.Ed., M.Phil., அவர்களுக்கு 24.04.2026 வெள்ளிக்கிழமை அன்று பணி நிறைவு பாராட்டு விழா பள்ளி மேலாண்மை (SMC) குழு சார்பில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தலைமையில் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமையாசிரியர் சூ.ஜோசப் மைக்கிள் அவர்களுக்கு பள்ளி மேலாண்மை (SMC) குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை (SMC) குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் இணைந்து, “தலைமையாசிரியர் ஒரு அர்ப்பணிப்புள்ள ஆசிரியர், ஊக்கமளிக்கும் தலைவர் மற்றும் பலருக்கு வழிகாட்டும் ஒளி. அவர்களின் சேவை எண்ணற்ற வாழ்க்கைகளை செதுக்கியுள்ளது” என்று பாராட்டினார்கள்.
மேலும், பணி நிறைவு பெறும் தலைமையாசிரியருக்கு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான ஓய்வுக்கால வாழ்த்துகளை தெரிவித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் நினைவாக அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.