பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியா நாட்டின் மிக உயரிய விருது!

ஸ்லோவாக்கியா நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய தேசிய கௌரவமான ‘தி ஆர்டர் ஆஃப் தி வைட் டபுள் கிராஸ் – ஃபர்ஸ்ட் கிளாஸ்’ (The Order of the White Double Cross – 1st Class) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயரிய விருதை ஸ்லோவாக்கியா நாட்டின் அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி தலைநகரமான பிராட்டிஸ்லாவா பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார்.

ஸ்லோவாக்கியா இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், உலகளாவிய கூட்டுறவை மேம்படுத்துவதிலும் பிரதமர் மோடி ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். இதனால் இந்த உயரிய கௌரவத்தைப் பெறும் முதல் இந்தியப் பிரதமர் ஆவார்.

33-வது சர்வதேச விருதுபிரதமர் மோடிக்கு வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் வழங்கப்படும் 33-வது மிக உயரிய சர்வதேச அங்கீகாரம் இதுவாகும்.

இந்த உயரிய கௌரவத்தை இந்தியாவின் 140 கோடி மக்களுக்குச் சொந்தமானதாகக் கருதுகிறேன்.இந்த அங்கீகாரத்தை இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு இடையே நிலவி வரும் நீடித்த நட்புறவுக்காக அர்ப்பணிக்கிறேன். இந்த விருது இரு நாட்டு மக்களிடையேயான பரஸ்பர நம்பிக்கை மற்றும் அன்பின் அடையாளமாகும். என பிரதமர் மோடியின் நெகிழ்ச்சிப் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *