சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்த காவல் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சென்னை காவல் ஆணையர்!

சென்னை, ஜூன் 25:

சென்னை மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய, நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவரை, சென்னை காவல் துறையின் குண்டர் தடுப்புப் பிரிவு (AGO) சிறப்பு காவல் குழுவினர் தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் கண்டறிந்து கைது செய்தனர்.

காவல் துறையினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் துல்லியமான புலனாய்வின் பலனாக, நீண்ட காலமாக சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல் குழுவினரின் பணியை பாராட்டும் வகையில், சென்னை மாநகர காவல் ஆணையர் A.அமல்ராஜ் , இ.கா.ப., அவர்களை தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், காவல் துறையினரின் கடமை உணர்வு, அர்ப்பணிப்பு மற்றும் துரிதமான செயல்திறனை பாராட்டும் விதமாக சம்பந்தப்பட்ட காவல் குழுவினருக்கு வெகுமதிகள் வழங்கி கௌரவித்தார்.

குற்றத் தடுப்பு மற்றும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யும் பணிகளில் காவல் துறையினர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு இந்த பாராட்டு மேலும் ஊக்கமளிப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *