
சென்னை, ஜூன் 14:
உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கிரசென்ட் இரத்தக் கொடையாளர்கள் குழு சார்பில் விருது வழங்கும் விழா (14.06.2026) சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில், இரத்த தான சேவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் SWOTT சமூக பணிக்குழு அறக்கட்டளை நிறுவனத்திற்கு இரத்த தான கொடையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பி.எஸ். அப்துர் ரஹ்மான் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் அகமது புகாரி மற்றும் ராஜா உசேன் ஆகியோர் இணைந்து இந்த விருதை வழங்கினர். SWOTT சமூக பணிக்குழு அறக்கட்டளையின் சார்பில், இரத்த தானப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது விருதைப் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் அமீர், SWOTT சமூகப்பணி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் சமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட இரத்தக் கொடையாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மனித உயிர்களைக் காப்பதற்காக தொடர்ந்து இரத்த தான சேவையில் ஈடுபட்டு வரும் SWOTT சமூக பணிக்குழு அறக்கட்டளையின் அர்ப்பணிப்பான சமூகப் பணிக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இரத்த தானத்தின் அவசியத்தை சமூகத்தில் பரப்பி, பல உயிர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செயல்பட்டு வரும் அமைப்பின் சேவை மேலும் தொடர வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.