திருவல்லிக்கேணி யானைகுளம் 6வது தெருவில் சிறப்பாக நடைபெற்ற மீலாது விழா

திருவல்லிக்கேணி : சென்னை யானைகுளம் 6வது தெரு வாழ் மக்களின் மீலாது நபி கமிட்டி சார்பில், புனித ரபியுல் அவ்வல் மாதத்தின் பிறை 1 முதல் பிறை 12 வரை, தினந்தோறும் ஓதல்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மீலாது விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதன் நிறைவு நாளான ரபியுல் அவ்வல் பிறை 12ஆம் நாள், யானைகுளம் 6வது தெரு இளைஞர்கள் குழு சார்பில் மீலாது விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை பஷீர், அப்துல்சமது, மொய்தீன், முகமதுஅனீஸ் மற்றும் முகமது உசேன் ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொண்டனர். அவர்களின் முயற்சியால் விழா சிறப்பாகவும், ஒழுங்காகவும் நடைபெற்றது.

விழாவின் நிறைவாக கலந்து கொண்ட அனைவருக்கும் தபர்ருக் வழங்கப்பட்டது. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாகக் கொண்டாடிய இவ்விழா, ஒற்றுமை உணர்வுடன் இனிதே நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *