மார்னிங் டைம்ஸ் இணையதள வெளியீடு மற்றும் விருதுகள் வழங்கும் விழா

சென்னை, அக். 2:
‘மார்னிங் டைம்ஸ்’ இதழின் இணையதள வெளியீடு மற்றும் விருதுகள் வழங்கும் விழா, 02.10.2026 வெள்ளிக்கிழமை மாலை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மார்னிங் டைம்ஸ் தலைமை செய்தி ஆசிரியர் N.அப்துல் சமது தலைமை வகித்தார். மார்னிங் டைம்ஸ் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவை துணை ஆசிரியர் அமீருதீன் காஜா மொய்தீன் மற்றும் சென்னை மாவட்ட செய்தியாளர் K.H.ரியாஸ் அலி அகமது ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியை உதவி ஆசிரியர் M.அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, ரிஜாய் தாமஸ் CEO, Securecam India, மௌலானா M.முஹம்மது மன்சூர் காசிபி, தலைவர் ஜமியத்து உலமா ஹிந்து தமிழ்நாடு, Dr.M.முஹம்மது சர்வத்கான் MBBS, நிறுவனர் அறம் பவுண்டேசன் மற்றும் MSK பாலி கிளினிக், பெரும்பாக்கம், ஜனாப் H.அஹமத் ரூமைசுதீன் ஃபைஜி, Managing Partner, Buharis Landmark, மற்றும் Dr.சமீர் நிறுவனர், SWOTT ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மார்னிங் டைம்ஸ் இணையதளம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. தலைமை செய்தி ஆசிரியர் N.அப்துல் சமது இணையதளத்தை வெளியிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் ஊடகப் பணியின் நோக்கங்கள் குறித்து துணை ஆசிரியர் காஜா மொய்தீன் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சிறப்புரையாற்றினர். ஊடகத்தின் சமூகப் பொறுப்பு, கல்வி, இளைஞர்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக அவர்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சிறப்பு விருந்தினர்களின் உரைகளை ஆர்வத்துடன் கேட்டதுடன், நிகழ்ச்சியின் ஏற்பாடுகளையும் பாராட்டினர்.

விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தங்கள் பள்ளிகளில் முதல் இடம் பிடித்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களின் கல்விச் சாதனையைப் பாராட்டும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பெற்றோர் மற்றும் பங்கேற்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

மேலும், மார்னிங் டைம்ஸ் பத்திரிகையின் வளர்ச்சிக்கும் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து பங்களிப்பு செய்த பிரபலங்கள் மற்றும் ஆதரவாளர்கள் கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

ஊடக நிறுவனத்தின் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதைதொடர்ந்து, மார்னிங் டைம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தலைமை செய்தியாளர், கௌரவ ஆசிரியர், துணை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், மாவட்ட செய்தியாளர்கள், மண்டல செய்தியாளர்கள், தொகுதி செய்தியாளர்கள் மற்றும் பகுதி செய்தியாளர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

அவர்களின் ஊடகப் பணியையும் செய்தி சேகரிப்பு மற்றும் மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்கும் பணியையும் பாராட்டும் வகையில் இந்த கௌரவிப்பு நடைபெற்றது.

விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மார்னிங் டைம்ஸ் தலைமை செய்தி ஆசிரியர் N.அப்துல் சமது பாராட்டினார். அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

விழாவின் நிறைவில் A.அப்துல் சமது, உதவி ஆசிரியர், நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், செய்தியாளர்கள், நிர்வாகிகள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சான்றோர் குரல் ஆசிரியர் பச்சையப்பன், SWOTT ஆசிரியர் K.M.ஜாவித் பர்வேஜ் மற்றும் மார்னிங் டைம்ஸ் நிர்வாகிகள், பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இணையதள வெளியீடு, மாணவர்களுக்கு விருது, பங்களிப்பாளர்களுக்கு கௌரவம் மற்றும் மார்னிங் டைம்ஸ் ஊடகக் குழுவினருக்கு விருது என பல்வேறு நிகழ்வுகளுடன் விழா சிறப்பாக நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *