
சென்னை, மே 1:
சென்னை பூக்கடை காவல் நிலையம் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று ஆட்டோக்கள் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
இந்த தீ விபத்து தற்செயலாக ஏற்பட்டதா அல்லது யாராவது திட்டமிட்டு தீ வைத்தார்களா என்பது குறித்து பூக்கடை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.