அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ORS கரைசல் வழங்க தமிழக சுகாதாரத் துறை உத்தரவு

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் தீவிரமாக அதிகரித்து வருவதையடுத்து, வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மாநில சுகாதாரத் துறை முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் ‘ஓ.ஆர்.எஸ்’ (ORS) கரைசல் தடையின்றி கிடைக்கச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கடும் வெயிலால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration), மயக்கம் போன்ற உடல்நல பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெயில் நேரங்களில் வெளியே செல்லாமல் இருக்கவும், போதிய அளவு தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு உடனடியாக ORS கரைசல் வழங்கப்படுவதன் மூலம் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *