கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் பாராட்டு

சென்னை, ஜூன் 15:
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு, அவரது வீரச் செயல்களைப் பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.48 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கி கௌரவித்தார்.
இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படையான 34 ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவில் பணியாற்றி வரும் மீனாட்சி சுந்தரம், கடந்த 2024 டிசம்பர் 19 அன்று ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீரத்துடன் போராடினார்.


அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவரது முகம் மற்றும் தோள்பட்டையில் தோட்டாக்கள் பாய்ந்து பலத்த காயமடைந்த போதிலும், போர்க்களத்தில் இருந்து பின்வாங்காமல் துணிச்சலுடன் எதிர்த்து போராடி பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றார்.
அவரது அபார வீரத்தையும், நாட்டிற்கான அர்ப்பணிப்பையும் பாராட்டி, நாட்டின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீரதீர விருதான ‘கீர்த்தி சக்ரா’ விருதை கடந்த ஜூன் 8, 2026 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் வழங்கி கௌரவித்தார்.


இதனைத் தொடர்ந்து, சொந்த ஊர் திரும்பிய லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.48 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ராணுவ வீரரின் சேவையை பாராட்டினர்.
தமிழக ராணுவ வீரரின் வீரச் செயல் இளைஞர்களுக்கு நாட்டுப்பற்றையும் தியாக உணர்வையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *