
சென்னை, ஜூன் 14:
சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஃபக்கீர் லெப்பை ஜமாஅத் மஸ்ஜிதின் நிர்வாகக்குழு தேர்தல் 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை, வக்ஃபு வாரிய நிர்வாகக்குழு முன்னிலையில் மஸ்ஜித் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தேர்தலில் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜமாஅத்தார்களின் ஒருமித்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வாகியுள்ள தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மார்னிங் டைம்ஸ் பத்திரிகை சார்பில் மனமார்ந்த உளங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
புதிய நிர்வாகத்தினர் தங்களுக்குள் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பேணிக்காத்து, ஜமாஅத்தார்களுடன் நெருக்கமான தொடர்புடன் செயல்பட்டு, மஸ்ஜிதில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் ஊழியர்களுடனும் நல்லிணக்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், மார்க்கப் பணிகள், சமூக நலப் பணிகள் மற்றும் மஸ்ஜிதின் வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக முன்னெடுத்து, ஜமாஅத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி சிறந்தோங்கிட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!!!
புதிய நிர்வாகக்குழுவின் தலைமையில் ஃபக்கீர் லெப்பை ஜமாஅத் மஸ்ஜித் மேலும் வளர்ச்சி பெற்று, சமுதாயத்திற்கு பயனுள்ள பல்வேறு சேவைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையையும் ஜமாஅத்தார்கள் தெரிவித்துள்ளனர்.