கானத்தூர் பிலால் நகர் நீர் தேக்கத் தொட்டி சுத்தம் செய்யும் பணி நிறைவு: நாளை முதல் சீரான குடிநீர் விநியோகம்!!!

செங்கல்பட்டு, ஜூன் 4:

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நோக்கில், பிலால் நகர் பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்கத் தொட்டியின் சுத்தம் செய்யும் பணி (04.06.2026) வியாழக்கிழமை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் வள்ளி எட்டியப்பன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி, 2வது வார்டு உறுப்பினர் செய்யது இப்ராஹிம் அவர்களின் முன்னெடுப்பில் இந்தப் பணி நடைபெற்றது. ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பஞ்சாயத்து பணியாளர்கள் நீர் தேக்கத் தொட்டியை முழுமையாக சுத்தம் செய்து, குடிநீர் சேமிப்பு மற்றும் விநியோகத்திற்குத் தேவையான பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் குடிநீரின் தரம் மேம்படுவதுடன், நீர் மாசுபாடு தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 2வது வார்டு உறுப்பினர் செய்யது இப்ராஹிம் தெரிவித்ததாவது:

“பிலால் நகர் பகுதியில் உள்ள நீர் தேக்கத் தொட்டியின் சுத்தம் செய்யும் பணி இன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இதன் காரணமாக தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்த குடிநீர் விநியோகம், நாளை முதல் வழக்கம்போல் சீராக வழங்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *