
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வெனிசுலா பொறுப்பு அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியப் பிரதமர் மற்றும் வெனிசுலா அதிபர் தரப்பில் பல முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
மேற்காசியப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலில், இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பன்முகப்படுத்த வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தவும், புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மருந்துத் துறை (Pharmaceuticals) மற்றும் மருத்துவத் தொழில்நுட்பங்களை வெனிசுலாவில் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளிலும் கூட்டுறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
வெனிசுலா தூதுக்குழுபொறுப்பு அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் உடன் ஒரு பெரிய உயர்மட்ட அமைச்சர்கள் குழுவும் இந்தியா வந்துள்ளது.
இதில் கீழ்வரும் துறைகளின் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்:
வெளியுறவுத்துறைபொருளாதாரம் மற்றும் நிதித்துறைஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைதகவல் மற்றும் செய்தித் தொடர்புத்துறை போக்குவரத்துத்துறைஇந்தக் குழுவினர் இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார்ந்த திறன்களை அறிந்துகொள்ளும் வகையில், உள்நாட்டு எரிசக்தி, மருந்து மற்றும் வாகன உற்பத்தி ஆலைகளுக்கு (Auto sectors) நேரில் சென்று பார்வையிட உள்ளனர்.
பயணத்தின் முக்கியத்துவம் வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் பொறுப்பு அதிபராகப் பொறுப்பேற்றார்.
அவர் தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும். முன்னதாக, அவர் வெளியுறவு அமைச்சராகவும் துணை அதிபராகவும் இருந்தபோது ஐந்து முறை இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.