
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி புது தில்லியில் நேரில் சந்தித்து, தமிழகத்தின் சாலைக் கட்டமைப்பு தொடர்பான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இச்சந்திப்பு குறித்த முக்கிய விவரங்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு!
* தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் சாலைப் பாதுகாப்பு நிதியை கோருதல்.
* சாலைப் பாதுகாப்பு,
* தமிழகத்தில் சாலைப் பாதுகாப்புக் கொள்கைகளை முழு அளவில் செயல்படுத்துதல்.
* மேம்பாலங்கள் நவீனமாக்கல்,
* பழுதடைந்த மற்றும் முக்கியமான மேம்பாலங்களை (Flyovers / Grade Separators) சீரமைத்து நவீனப்படுத்துதல்.
* நெடுஞ்சாலை விரிவாக்கம்,
* மாநிலத்தில் உள்ள முக்கிய 4 வழிச் சாலைகளை 6 வழிச் சாலைகளாக தரம் உயர்த்துதல்.
* மத்திய நிதி வெளியீடு,
* 2026-27 நிதியாண்டில் தமிழ்நாட்டின் சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மத்திய நிதியை விரைவாக விடுவித்தல்.
* விபத்து குறைப்பு கடந்த ஆண்டில் தமிழகத்தில் சுமார் 71,313 சாலை விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், விபத்து அதிகம் நடக்கும் பகுதிகளைக் (Black Spots) கண்டறிந்து சரிசெய்தல் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
தமிழகத்தின் கோரிக்கைகளை விரிவாகப் பரிசீலித்து, தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதியளித்துள்ளார்.