தமிழக காவல்துறை இயக்குனராக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பதவி ஏற்பு!

சென்னை : ஜூன்-03, தமிழ்நாட்டின் 34 வது சட்டம்-ஒழுங்கு காவல் துறை தலைமை இயக்குநராக 2026 ஜூன் 3, சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப, பதவி ஏற்றுக்கொண்டார்.

தமிழக காவல்துறை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தின் பட்டிண்டா (Bathinda) பகுதியைச் சேர்ந்தவர்.

அவரது தந்தை ஒரு வழக்கறிஞர் என்பதால், இவரும் சட்டம் பயின்று B.A.(Law), LLB பட்டங்களைப் பெற்றார். மேலும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் (Ph.D) பட்டத்தையும் முடித்துள்ளார்.

காவல்துறையில் இளம் வயதில் ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, 1994-ம் ஆண்டு தனது 22-வது வயதிலேயே தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் (1994 Batch) அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

ஆரம்ப காலத்தில் தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும் (SP), சென்னை பூக்கடை மற்றும் தெற்கு போக்குவரத்துப் பிரிவில் துணை ஆணையராகவும் (DCP) பணியாற்றினார்.

மேலும் பஞ்சாப், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சுமார் 7 ஆண்டுகள் மத்திய புலனாய்வு அமைப்பில் (CBI) எஸ்பி மற்றும் சண்டிகரில் இணை இயக்குநராகப் பணியாற்றினார்.

தமிழகம் திரும்பிய பின் சிபிசிஐடி ஐஜி,மதுரை காவல் ஆணையர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்.

சென்னை மாநகரில் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் 2021 சட்டமன்ற தேர்தல் காலத்திலும் சென்னை மாநகர காவல் ஆணையராக சிறப்பாகச் செயல்பட்டார்.

டெல்லியில் எல்லை பாதுகாப்புப் படையின் (BSF) கிழக்கு பிராந்திய கமாண்டராகவும், பின்னர் எல்லை பாதுகாப்புப் படையின் கூடுதல் தலைமை இயக்குநராகவும் (SDG) மிக உயரிய பொறுப்பில் பணியாற்றினார்.

முக்கிய சாதனைகள் ரயில் கொள்ளை வழக்கு!

சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், வட இந்தியக் கொள்ளையர்களை இவரது தலைமையிலான சிபிசிஐடி பிரிவு கைது செய்தது.

முக்கிய வழக்குகள்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு ஆகிய முக்கிய வழக்குகளைக் கையாண்டுள்ளார்.

விருதுகள்!

காவல் துறையில் ஆற்றிய சிறப்பான சேவைகளுக்காக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

* குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் (President’s Police Medal for Distinguished Service).

* சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் (Police Medal for Meritorious Service).

* தமிழக முதலமைச்சரின் பதக்கம் பெற்றுள்ளார்.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல்.சைபர் குற்றங்களைக் (Cyber Crimes) கட்டுப்படுத்துதல். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழித்தல் ஆகியவை தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி-யாகப் பொறுப்பேற்றவுடன், தனது முதன்மை நோக்கங்களாக  அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *