தமிழக அரசின் அமைச்சர்களுடன் மார்னிங் டைம்ஸ் துணை ஆசிரியர், மாவட்ட செய்தியாளர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சென்னை, ஜூன் 2: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக அரசின் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், தமிழக வெற்றி கழகம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான டாக்டர் கோ.க.அருண்ராஜ் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலூர் (மதுரை) சட்டமன்ற உறுப்பினருமான பெ.விஸ்வநாதன் ஆகியோரை, மார்னிங் டைம்ஸ் பத்திரிகையின் துணை ஆசிரியர் முஹம்மது ரவூப் மற்றும் சென்னை மாவட்ட செய்தியாளர் ரியாஸ் அலி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, அமைச்சர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி கவுரவிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

நிகழ்வின் நிறைவாக, மார்னிங் டைம்ஸ் பத்திரிகை மற்றும் அதன் சிறப்பு மலர் அமைச்சர்களிடம் வழங்கப்பட்டது. அவற்றை அமைச்சர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *