
தமிழ்நாட்டில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மே 20, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்துள்ள பொழிச்சலூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் மரியநிவாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 2025-26 கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
*மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:*
A.ஹன்சிகா — 487/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்ததுடன், அறிவியல் பாடத்தில் 100/100 முழு மதிப்பெண் பெற்றார்.
A.R.C.சாதனா — 481/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
A.G.ஜீவந்திகா — 473/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
2025-26 கல்வியாண்டில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று, மரியநிவாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் கல்வித் தரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
இந்த வெற்றிக்காக இரவு பகலின்றி உழைத்து படித்த மாணவ, மாணவிகளுக்கும், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து சிறப்பாக கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகம் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
மேலும், பள்ளியின் தலைவர் J.ரங்கநாதன், தாளாளர் R.பத்மினி, துணைத்தலைவர் K.R.ராகவேந்திரன், தலைமை ஆசிரியர் V.விஜயகுமாரி, உதவி தலைமை ஆசிரியர் C.தனசேகரன் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் மாணவ, மாணவிகளின் சாதனையை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.