
சென்னை: தமிழ்நாடு அரசு (18 மே 2026) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அரசாணையின்படி, சென்னை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த குமரகுருபரன் அவர்கள் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாகத் திறன் மற்றும் பொதுசேவையில் அனுபவமிக்க அதிகாரியான டாக்டர் ஜி.எஸ்.சமீரன் அவர்கள், சென்னை மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், குடிமக்கள் நலப்பணிகள் மற்றும் நகராட்சி சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.