முதல்வராக பொறுப்பேற்ற விஜய்: முதல் கையெழுத்தாக 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவிப்பு

சென்னை: முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட விஜய், தனது முதல் கையெழுத்தாக பொதுமக்களுக்கு முக்கிய நலத்திட்ட அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மாதத்திற்கு 500 யூனிட்களுக்கு உட்பட்டு மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் கோப்பில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.

மேலும், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும் அவர் ஒப்புதல் வழங்கினார். இந்த சிறப்பு படை பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்கவும், அவசர சூழ்நிலைகளில் விரைந்து செயல்படவும் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனுடன், மாநிலம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மற்றும் மாநில அளவிலும் தனிப்படைகள் அமைக்கும் திட்டத்திற்கும் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.

முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மக்கள் நலன், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு ஆகிய முக்கிய துறைகளில் அதிரடி முடிவுகளை எடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *