தமிழகத்தில் 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூட தமிழக முதலமைச்சர் உத்தரவு

சென்னை:
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து, பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி முக்கியமான நடவடிக்கையாக 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு மதுபான விற்பனை கழகமான டாஸ்மாக் நிர்வகித்து வரும் 4,765 சில்லறை மதுக்கடைகளின் இருப்பிடங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த கடைகள் அடையாளம் காணப்பட்டன. ஆய்வின் அடிப்படையில்,
வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள 186 கடைகள்,
பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுக்கடைகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது.


இதையடுத்து, “பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வரும் 717 சில்லறை மதுக்கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *