மயிலாப்பூர், இலாயிட்ஸ் ரோடு பகுதியில் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கிய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள்

சென்னை : கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் பல இடங்களில் குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூர், அவ்வை சண்முகம் சாலை, லாயிட்ஸ் ரோட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை நிர்வாகிகள் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி பழம் வழங்கினர்.

இந்த நிகழ்வில், அதிக வெப்பத்தால் அவதிப்படும் பொதுமக்களுக்கு தண்ணீர் மற்றும் குளிர்ச்சியான பானங்கள் வழங்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கோடை காலத்தில் இதுபோன்ற சேவைகள் தொடர வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *