சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடிகளில் துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 235 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது.

அப்போது, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (ஏப்ரல் 23, 2026) நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தனது சொந்தத் தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இன்று காலை சென்னையில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்த அவர், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதை சமூக வலைதளங்கள் வாயிலாகவும் உறுதிப்படுத்தினார்.

திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராகவும் களமிறங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின், தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு நேரடியாகச் சென்று அங்கு நடைபெறும் வாக்குப்பதிவு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *