வண்டலூர் உயிரியல் பூங்காவில் இலவச அனுமதி: அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவிப்பு

சென்னை, ஜூன் 21, 2026:

பூங்காக்களில் பொதுமக்கள் இலவசமாக சென்று பார்வையிடும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுக் கட்டணத்தை வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் அவர்களின் குடும்ப அறக்கட்டளை தனது சொந்த நிதியிலிருந்து பூங்கா நிர்வாகத்திற்கு முழுமையாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் பூங்காக்களுக்கு வருகை தந்தனர். அதன்படி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு நாளுக்கு 20 ஆயிரம் நுழைவுச்சீட்டுகள் வீதம், இரு நாட்களுக்கு மொத்தம் 40 ஆயிரம் நுழைவுச்சீட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், ஆன்லைன் நுழைவுச்சீட்டு பெறாத பலரும் இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேரடியாக வருகை தந்தனர். ஆனால், நுழைவுச்சீட்டு இல்லாமல் பூங்காவிற்குள் அனுமதிக்க முடியாது என பூங்கா நிர்வாகம் தெரிவித்தது. இதனால் பொதுமக்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையடுத்து, வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுமதிச்சீட்டு இன்றி வருகை தரும் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *