சர்வதேச கடலோர தூய்மை நாள் 2026 பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை, செப்டம்பர் 19, 2026:
சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பாக கடல் ஆராய்ச்சி மையம் (Centre for Ocean Research), தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையம் (NCCR) மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் (MoES) ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச கடலோர தூய்மை தினம் 2026 பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை அக்கரை கடற்கரையில் 19.09.2026 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வின் தொடக்கமாக சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். முனைவர் B.ஷீலா ராணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, முனைவர் R.S.கங்காரா (இயக்குநர், தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், இந்திய அரசு) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முக்கிய உரையாற்றினார். முனைவர் D.இன்பகந்தன் (பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், கடல் ஆராய்ச்சி மையம், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்) அவர்கள் நன்றியுரை வழங்கினார். M.அப்துல் ரஹ்மான் (Mangrove Foundation of India, MFI) அவர்கள் இணை நிறுவன பிரதிநிதியாக கலந்துகொண்டார்.

இந்த கடலோர தூய்மை நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் S. சிவராஜ், (உதவிப்பேராசிரியர், கடல் ஆராய்ச்சி மையம், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்), முனைவர் C.குமார் (உதவிப்பேராசிரியர், கடல் ஆராய்ச்சி மையம், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்), முனைவர் N.ஜான் பால், (இணைப் பேராசிரியர், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்) மற்றும் J.யுவராஜ் உதவிப்பேராசிரியர் விஷுவல் கம்யூனிகேஷன் (Visual Communication – VISCOM) துறை, அவர்களின் தலைமையில் சுமார் 130 நாட்டு நலப்பணி திட்ட (NSS) மாணவர்கள், 70 கடல்சார் உயிரியல் துறை மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். மொத்தமாக ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகள் வாயிலாக கடலோரம் சுத்தமாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், குப்பைகள் மற்றும் நெகிழிக் கழிவுகளை வகைப்படுத்தி சுமார் 214 கிலோ கழிவுகள் சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இது ஒரு செயல்முறை அனுபவமாகவும், சுற்றுச்சூழல் கல்விக்கான சிறந்த வாய்ப்பாகவும் இருந்தது. இந்த நிகழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பினை உறுதிசெய்து உலகளாவிய சவால்களை உள்ளூர்மட்ட செயல்களில் பிரதிபலிக்கும் விதமாக கல்வி நிறுவனங்கள் எப்படி பங்களிக்க முடியும் என்பதை நன்கு வெளிக்காட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *