
சென்னை, ஜூலை 6:
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் மார்னிங் டைம்ஸ் பத்திரிகையின் சென்னை மாவட்ட செய்தியாளர் ரியாஸ் அலி மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு மிகுந்த அன்பும், நல்லுறவும் நிறைந்த சூழலில் நடைபெற்றது. அப்போது தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், மக்களுக்கான அரசு நலத்திட்டங்கள், பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பொதுநலன் சார்ந்த விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், மார்னிங் டைம்ஸ் பத்திரிகையின் சிறப்பு மலர் அமைச்சர் அவர்களிடம் செய்தியாளர் ரியாஸ் அலி மரியாதையுடன் வழங்கினார். இதனை அமைச்சர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, பத்திரிக்கையின் செய்திச் சேவைக்கும், சமூகப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.