சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடர்புகொள்ள 1091 உதவி எண் அறிவிப்பு

சென்னை, ஜூன் 22, 2026:

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை விரைவாக தொடர்புகொள்ள 1091 என்ற இலவச உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூன் 9ஆம் தேதி இந்த சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த படையின் முதல் பெண் ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த அதிரடிப்படை முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்திறனை மேம்படுத்தவும், பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் 1091 என்ற இலவச உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்புகொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான புகார்கள், உதவிகள் மற்றும் அவசர தேவைகளுக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் சேவையை எளிதாகப் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த புதிய உதவி எண் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விரைவான பாதுகாப்பு மற்றும் உடனடி உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *