
புதுடில்லி ஜூன்:10
புதுடெல்லியில் உள்ள 10 ஜனபத் இல்லத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசில் சமீபத்தில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அமைச்சரவையில் இணைக்கப்பட்டனர்.
இதன் மூலம் 1967-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழக ஆட்சியில் முதன்முறையாகப் பங்கு வகிக்கிறது. இந்தச் சூழலில் இச்சந்திப்பு இரு கட்சிகளுக்கு இடையிலான அரசியல் நெருக்கத்தை அதிகரித்துள்ளது.
கடந்த மே 2026 இல் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, காங்கிரஸ் கட்சியின் இரு முக்கியத் தலைவர்களையும் தமிழக முதலமைச்சர் விஜய் முறைப்படி சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.