குடியரசு தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தமிழக முதலமைச்சர்!

டெல்லிக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் (NITI Aayog) ஆளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.

புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று (ஜூன் 10, 2026) மரியாதை நிமித்தமாக தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, குடியரசுத் தலைவருடன் அவர் மேற்கொள்ளும் முதலாவது அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *