ஆர்யா நடித்துள்ள ‘அனந்தன் காடு’ படத்தின் டீசர் வெளியானது

அனந்தன் காடு’ திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து ‘ரன் பேபி ரன்’ படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘அனந்தன் காடு’. எம்புரான் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய முரளி கோபி இந்த படத்துக்கு கதை எழுதியுள்ளார்.

மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிக்கும் இந்த படத்துக்கு ‘காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளர் அக்னிஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். நிகிலா விமல், ரெஜினா, சுனில், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது.

‘அனந்தன் காடு’ திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *