தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற தமிழக டிஜிபி

சென்னை, ஜூன் 3: தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் 34-வது புதிய சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநராக (டிஜிபி) பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்த சந்திப்பின்போது, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை, காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பொறுப்பை ஏற்றுள்ள டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, சிறப்பாகப் பணியாற்ற தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *