பொழிச்சலூர் மரியநிவாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் மாணவ மாணவிகள் தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 2025-26 கல்வியாண்டிற்கான +2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8, 2026 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்துள்ள பொழிச்சலூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் மரியநிவாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, 2025-26 கல்வியாண்டுக்கான +2 பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:
அஜந்தா பாலசுப்பிரமணியம் — 561/600 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

C.சாலமோன் — 539/600 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

B.சுப்ரஜா — 536/600 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடம் பெற்றார்.

மேலும், ARC அர்ஜுன் என்ற மாணவன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

2025-26 கல்வியாண்டில் நடைபெற்ற +2 பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் அனைவரும் சிறப்பாக தேர்ச்சி பெற்று, மரியநிவாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் கல்வித் தரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

இந்த வெற்றிக்காக இரவு பகலின்றி உழைத்து படித்த மாணவ, மாணவிகளுக்கும், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து சிறப்பாக கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகம் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

பள்ளியின் தலைவர் J.ரங்கநாதன், தாளாளர் R.பத்மினி, துணைத்தலைவர் K.R.ராகவேந்திரன், தலைமை ஆசிரியர் V.விஜயகுமாரி, உதவி தலைமை ஆசிரியர் C.தனசேகரன் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் மாணவர்களின் சாதனையை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *