பிலாலியா அரபிக் கல்லூரி மதரஸா மாணவர்கள் +2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை!

தமிழ்நாட்டில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான +2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8, 2026 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெம்மேலியில் அமைந்துள்ள பிலாலியா அரபிக் கல்லூரி (Bilalia Arabic College) மதரஸா மாணவர்கள் சிறப்பான தேர்ச்சி பெற்று கல்வி நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இக்கல்லூரி இஸ்லாமிய மார்க்கக் கல்வியான தீனியாத்துடன் உலகக் கல்வியையும் இணைத்து மாணவர்களை சிறந்த ஆலிம்களாகவும், பட்டதாரி இளைஞர்களாகவும் உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வில் பிலாலியா அரபிக் கல்லூரி மதரஸாவில் பயிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:

S.சையது இர்ஃபான் – 559 / 600 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம்

U.அஹமது சலீம் – 523 / 600 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம்

S.N. முஹம்மது உமர் – 484 / 600 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம்

இவர்கள் பெற்றுள்ள இந்த சிறப்பான சாதனை பிலாலியா அரபிக் கல்லூரி மதரஸாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.

மேலும், 2026 கல்வியாண்டு +2 பொதுத்தேர்விற்காக இரவு பகலின்றி உழைத்து படித்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி முதல்வர் மற்றும் பெற்றோர்கள் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *