இளைஞர்களின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை: கானத்தூர் ரெட்டிக்குப்பத்தில் புதிய விளையாட்டு திடல் அமைப்பு பணிகள் தீவிரம்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியின் பிலால் நகர் மற்றும் நாகூர் மீரான் நகர் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள், தங்களது பகுதியில் விளையாட்டு திடல் அமைத்து தருமாறு ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை தொடர்ந்து, கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி எட்டியப்பன் அவர்களின் ஆணைக்கிணங்க, ஊராட்சி மன்ற செயல் தலைவர் E.பூபாலன் மற்றும் இரண்டாவது வார்டு உறுப்பினர் செய்யது இப்ராஹிம் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

விளையாட்டு திடல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தினந்தோறும் பணிகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, பணியாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

இப்புதிய விளையாட்டு திடல் உருவாகி வருவது அப்பகுதி இளைஞர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *