
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தமிழகத்தின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், அவரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாளராக டிஐஜி தர்மராஜன் (DIG Dharmarajan) நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (மே 6, 2026), டிஐஜி தர்மராஜன் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள விஜய்யின் இல்லத்திற்குச் சென்று, அவருடன் பாதுகாப்பு மற்றும் கான்வாய் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
மேலும், நாளை (மே 7) நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், அப்பகுதியில் டிஐஜி தர்மராஜன் தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே, மத்திய அரசு விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.